மருத்துவர்கள் சேவை தொடர்பில் ஒண்டாரியோ மாகாண உச்சநீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு,

மருத்துவர்கள், தாங்கள் தார்மீக மற்றும் மத ரீதியாக எதிர்க்கின்ற மருத்துவ சேவைகளுக்கு கூட, பரிந்துரைகளை வழங்கவேண்டுமென, ஒண்டாரியோ மாகாண உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மருத்துவர்கள் கல்லூரி, ஒண்டாரியோ வைத்திய சிகிச்சை நிபுணர்கள் அமைப்பு ஆகியவற்றின் கொள்கைகளை உறுதிப்படுத்தும் விதமாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது.

இதன் அடிப்படையில், கருக்கலைப்பு, கருணைக்கொலை ஆகியவற்றுக்கான பரிந்துரைகளை, மருத்துவர்கள் தேவைப்படுமிடத்து வழங்கியாகவேண்டும்.

இவ்வாறு ஏற்கனவே பிராந்திய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை, கனடிய கிறிஸ்தவ வைத்திய சமூகம், கனடிய கிறிஸ்தவ வைத்தியர்கள் சம்மேளனம் உள்ளடங்கலான அமைப்புக்கள் எதிர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவர்கள், தாம் எதிர்க்கும் சேவைகளுக்கு பரிந்துரைகளை வழங்காதமை, பாதிப்புக்களை ஏற்படுத்தியமைக்கான எந்த ஆதாரங்களும் இல்லை என அவை தெரிவித்துள்ளன.