நயன்தாராவுக்கு பிரபுதேவாவால் வந்த சிக்கல் – தொடரும் மோதல்!

பிரபுதேவா படம் முதலில் வெளியாவதால் இது நயன்தாரா படத்துக்கு பிஸ்னஸில் பெருமளவு நஷ்டத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.


ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்துள்ள தேவி இரண்டாம் பாகம் மே 31-ம் தேதி திரைக்கு வருகிறது.

மேலும் இப்படம் சூர்யாவின் என்.ஜி.கே-வுடன் மோதுகிறது. முதல் பாகம் தந்த வெற்றி மற்றும் கோடை விடுமுறை என்பதால் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளார்களாம்.

தேவி படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்து வருகிறார். மேலும் கோவை சரளா, நந்திதா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க தற்போது அதே நாளில் பிரபு தேவா, தமன்னா இந்தியில் நடித்துள்ள காமோக்‌ஷி படமும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.