காவல்துறையினரால் நெடுஞ்சாலைகள் மற்றும் நீர்வழி ஆகியன குறித்த விழிப்புணர்வு நடவடிக்கை!

விக்டோரியா நாள் நீண்ட வார இறுதியை முன்னிட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் நீர்வழி ஆகியன குறித்த விழிப்புணர்வு நடவடிக்கை, ஒண்டாரியோ மாகாண காவல்துறையினரால் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


ஒண்டாரியோ பிளேஸில், இன்று காலை 10 மணிமுதல் நண்பகல் வரை, டொரோண்டோ காவல்துறை, ஹம்பர் கல்லூரி மற்றும் படகு போக்குவரத்து பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றின் ஆதரவோடு இவ்விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கவன சிதறலுடன் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவோரை இலக்குவைத்து, வரும் திங்கட்கிழமை வரை, விசேட போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கைகள், ஒண்டாரியோ மாகாண காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.