அதிகமாக ஓப்பியாயிட் சார்ந்த போதைமருந்துகளின் பாவனையால் உயிரிழப்புக்கள் அதிகரிக்கின்றன!

டொரோண்டோவில், அளவுக்கதிக ஓப்பியாயிட் சார்ந்த போதைமருந்துகளின் பாவனையால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் எண்ணிக்கை, இவ்வாண்டு வெகுவாக உயர்வடைந்துள்ளது.


கடந்த ஆண்டு முதல் 4 மாதகாலத்துடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு சமகாலத்தில் அவ்வெண்ணிக்கை இரண்டு மடங்காகியுள்ளது.

கடந்த ஆண்டு மே முதலாம் திகதி வரையில், அளவுக்கதிக ஓப்பியாயிட் போதைமருந்து பாவனை காரணமாக 35 பேர் உயிரிழந்த நிலையில், இவ்வாண்டு 68 பேர் உயிரிழந்துள்ளதாக, டொரோண்டோ பொதுச்சுகாதார அலுவலகத்தின் தரவுகள் தெரிவித்துள்ளன.

அளவுக்கதிக போதைமருந்து பாவனை சார்ந்த அவசரகால அழைப்புக்கள் எண்ணிக்கையும், இரண்டு மடங்கு உயர்வடைந்துள்ளது.

டொரோண்டோவின் அளவுக்கதிக போதைப்பொருள் பாவனை தடுப்பு நிலையத்துக்கான நிதி ஒதுக்கீடு, கடந்த மார்ச் மாதத்தில் ஒண்டாரியோ மாகாண அரசினால் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இத்தகவல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.