விஜய் 63 படத்தின் சாட்டிலைட் உரிமம் மட்டும் இத்தனை கோடி விலைபோனதா?- மெர்சலை விட இத்தனை கோடி அதிகமா?

விஜய் சினிமாவில் பெரிய மார்க்கெட் வைத்திருப்பவர். படத்துக்கு படம் பாக்ஸ் ஆபிஸ், பட பிசினஸ் எல்லாம் அதிகமாகிக் கொண்டே வருகிறது.


கடைசியாக இவரது நடிப்பில் சர்கார் வெளியாகி இருந்தது, படமும் நன்றாக ஓடியது. இப்போது தளபதி 63 படத்திற்காக ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட்டிங். காரணம் அட்லீ-விஜய் கூட்டணி, கண்டிப்பாக இப்படம் பெரிதாக பேசப்பட வாய்ப்பு உள்ளது.

விஜய்யின் மெர்சல் படத்தை ஜீ தமிழ் ரூ. 19 கோடிக்கு வாங்கினார்கள், சர்கார் படத்தை சன் வாங்கியிருந்தார், விலை சரியாக தெரியவில்லை. தற்போது விஜய்யின் 63வது படத்தை சன் பிக்சர்ஸ் ரூ. 28 கோடிக்கு வாங்கியிருக்கிறார்களாம்.

இது ஒரு பெரிய தொகை விஜய் படம் விலைபோனதை கேட்டு கோலிவுட் சினிமாவே ஆச்சரியத்தில் உள்ளதாம்.