நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா இது? வைரலாகும் புகைப்படம்!

பல படங்களில் காமெடியில் கலக்கிய நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன்னின் மகனின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கடந்த 1936ம் ஆண்டு கும்பகோணத்தில் பிறந்தவர் நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன். 1949ம் ஆண்டு அவ்வையார் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு படிப்பில் ஆர்வம் காட்டவே சினிமாவில் நடிக்கவில்லை. இந்த நிலையில், ஹோமியோபதி மருத்துவராக நடித்த மாந்தோப்பு கிளியே என்ற படம் 1979ம் ஆண்டு திரைக்கு வந்தது. இப்படத்தைத் தொடர்ந்து வரிசையாக பல படங்களில் நடித்து வந்தார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான படம் தலைநகரம். கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி தொண்டை புற்றுநோயால் உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 73.

ஓமக்குச்சி நரசிம்மன் சரஸ்வதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு, சங்கீதா, விஜயலட்சுமி மற்றும் நிர்மலா என்ற 3 மகள்கள் மற்றும் ஓம் காமேஷ்வரா என்ற ஒரு மகனும் இருக்கின்றனர். காமேஷ்வரா தற்போது சாமியாராக மாறிவிட்டாராம். சாய் பாபா, சித்தர்கள், இயேசுவை நேரில் சந்தித்திருக்கிறேன் என்று கூறியுள்ள அவர், அதன் பிறகு ஆன்மீகத்தை நானே நம்பத் தொடங்கினேன் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது சென்னை திருவல்லிக்கேணியில் காமேஷ்வரா சுவாமி வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.