விக்டோரியா நாள் நீண்ட வார இறுதியை முன்னிட்டு விசேட போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்.

விக்டோரியா நாள் நீண்ட வார இறுதி நெருங்கிவரும் நிலையில், ஒண்டாரியோ மாகாண காவல்துறையால், விசேட போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


கவன சிதறலுடன் வாகனம் ஓட்டுவதால் வாழ்க்கைகள் பாழாகின்றன; பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டுங்கள் எனும் தொனிப்பொருளிலான இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள், வருகின்ற திங்கட்கிழமை வரை முன்னெடுக்கப்படவுள்ளன.

ஆபத்தான மற்றும் கவனக்குறைவான வாகன ஓட்டுனர்கள் இதன்போது இலக்கு வைக்கப்படவுள்ளனர். ஒண்டாரியோவில் இடம்பெறும் 80 வீதமான விபத்துக்களுக்கு, கவன சிதறல் ஏதாவதொரு வகையில் காரணமாக அமைவதாக, ஒண்டாரியோ மாகாண காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

கவன சிதறலுடன் வாகனம் ஓட்டும் ஒருவர், விபத்தொன்றை உண்டாக்கும் சாத்தியங்கள், ஏனையோரைவிட மூன்று மடங்கு அதிகமாக உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.