தந்தை வாகனத்தால் மோதியதில் தாயும் மகனும் உயிராபத்தான நிலையில்

பிரம்டன் Mount Pleasant பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கான பாதையில், தந்தையால் செலுத்தப்பட்ட பிக்கப் ரக வாகனத்தினால் மோது்ணட தாயும், ஏழு வயது மகனும் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Mount Pleasant இல் அமைந்துள்ள GO தொடரூந்து நிலையத்திற்கு அருகே, Conductor Lane மற்றும் Portsdown பகுதியில், நேற்று காலை 8.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதனை பீல் பிராந்திய காவல்துறையினர் உறுதிப்படு்த்தியுள்ளனர்.

குறித்த அந்த வீட்டுக்கான பாதையில் நின்றுகொண்டிருந்த போது தாயும் மகனும் வாகனத்தினால் மோதுண்டதாகவும், தந்தை வாகனத்தை பின்னோக்கி நகர்த்திய போது, திறந்திருந்த சாரதி பக்க கதவினால் அவர்கள் மோதுண்டிருக்கக்கூடும் என்றும் விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் 41 வயதான ஜோனதன் லியோன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.