டொரோண்டோவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய உட்கட்டமைப்பு பராமரிப்பு திட்டம் அறிவிப்பு!

டொரோண்டோவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய உட்கட்டமைப்பு பராமரிப்பு திட்டம், நகரமுதல்வர் ஜோன் டோரியால் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒரு பில்லியன் டொலர்கள் பெறுமதியிலான இத்திட்டத்தின்மூலம், வீதிகள், நடைபாதைகள், பாலங்கள், நீர்வழங்கல், வடிகாலமைப்பு என்பவற்றோடு, Gardiner கடுகதி சாலையும் புனரமைக்கப்படவுள்ளது.

இலை துளிர் காலம் தொடங்கி, கோடைகாலம் முழுவதும் இடம்பெறவுள்ள இந்த உட்கட்டமைப்பு புனரமைப்பு பணிகள், பாரிய போக்குவரத்து தாமதங்களையும் உண்டாக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இவை, 50 பாரிய வீதி தடைகளையும், 27 நடுத்தர மற்றும் 51 சிறிய வீதித்தடைகளையும் உண்டாக்கவுள்ளன.