தளபதி 63 ரிலீஸானால் இதுதான் நடக்குமாம் – பிரபல நடிகர் சொன்ன சூப்பர் தகவல்!

தளபதி 63 படம் வெளிவந்தால் தமிழகத்தில் கிரிக்கெட்டுக்கு இணையாக ஃபுட்பால் மீதான மோகமும் அதிகரிக்கும் என ஞான சம்பந்தம் கூறியுள்ளார்.


அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது.

என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இப்படத்தில் நயன்தாராவின் தந்தையாக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பேச்சாளர் ஞான சம்பந்தம் நடித்து வருகிறார்.

இப்படம் குறித்து அண்மையில் பேசிய அவர், தளபதி 63 படம் வெளிவந்தால் தமிழகத்தில் கிரிக்கெட்டுக்கு இணையாக ஃபுட்பால் மீதான மோகமும் அதிகரிக்கும் என்றார்.