பிரம்டன் வீடொன்றில் பெண் சடலமாக மீட்பு

பிரம்டனில் உள்ள வீடொன்றினுள் இருந்து 82 வயது பெண் ஒருவர் இன்று திங்கட்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இது தொடர்பில் காவல்துறையினர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.


Queen Street Eastற்கு அருகே, Bramlea வீதி மற்றும் Gates of Bramalea பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து இன்று காலை 9 மணியளவில் அதிகாரிகள் குறித்த அந்த சடலத்தினை மீட்டுள்ளனர்.

தகவல் அறிந்து அதிகாரிகள் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த வேளையில், அந்த வீட்டினுள் பிரம்டனைச் சேர்ந்த போ லியன் லீ என்ற குறித்த அந்தப் பெண் பலத்த காயங்களுடன் காணப்பட்டதாகவும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் ஆண் ஒருவரைக் கைது செய்துள்ள காவல்துறையினர், இன்று பிற்பகல் அவரை நீதிமன்றில் நிறுதியுள்ளனர்.