துப்பாக்கிகளை மீள வாங்கும் திட்டத்தில், இதுவரை, 1235 துப்பாக்கிகள் வாங்கப்பட்டுள்ளன.

டொரோண்டோ காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும், துப்பாக்கிகளை மீள வாங்கும் திட்டத்தில், இதுவரை, 1235 துப்பாக்கிகள் வாங்கப்பட்டுள்ளன.


நீள துப்பாக்கிகளுக்கு 200 டொலர்களும், கைத்துப்பாக்கிகளுக்கு 350 டொலர்களும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு துப்பாக்கிகளை மீள வாங்குவதற்காக, டொரோண்டோ காவல்துறைக்கு, 750,000 டொலர்கள் மக்கள் வரிப்பணத்தை, வரவுசெலவு திட்டத்தில் ஒதுக்குவது குறித்து, இவ்வாரம் டொரோண்டோ மாநகரபை ஆராயவுள்ளது.

கடந்த மாதம் 26ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குறித்த துப்பாக்கிகளை மீள வாங்கும் திட்டம், வரும் 17ம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளது.