பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இணைகிறார் ஆதி!

இயக்குனர் மணிரத்னம் தனது கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.


இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் ஆதியை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அமர் கல்கி எழுதியிருக்கும் இந்த கதையில், ஆதித்த கரிகாலனாக விக்ரமும், பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடிக்கவுள்ளனர்.

இவர்களுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நாயகிகளாக நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.