‘தல’ அஜித்தின் சம்பளம் 60 கோடி! வாய்பிளக்க வைக்கும் தகவல்!

தற்போது வரை 40 முதல் 50 கோடி வரை சம்பளம் பெற்றுவந்த அஜித், இந்த படத்தின் வெற்றிக்குப் பின் தன்னுடைய சம்பளத்தை 60 கோடியாக மாற்றிவிட்டாராம்.


‘அஜித்’… இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளக்கும்.

இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும்.

திரைத்துறையில் எந்தவித பின்புலமுமின்றி அறிமுகமாகி இன்று தனது விடா முயற்சியால் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியிருக்கிறார் அஜித்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விஸ்வாசம் படம் வரலாறு காணாத வசூல் சாதனையை நிகழ்த்தியது.

தற்போது வரை 40 முதல் 50 கோடி வரை சம்பளம் பெற்றுவந்த அஜித், இந்த படத்தின் வெற்றிக்குப் பின் தன்னுடைய சம்பளத்தை 60 கோடியாக மாற்றிவிட்டாராம்.

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.