காட்டேரி திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு

‘யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’ திரைப்படங்களை இயக்கிய டீகே இயக்கத்தில் நடிகர் வைபவ் நடித்துள்ள ‘காட்டேரி’ திரைப்படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.


விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு எஸ்.என்.பிரசாத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஜூன் முதல் வாரம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

சாதாரண ஹரார் திரைப்படமாகவோ அல்லது நகைச்சுவை படமாகவோ அல்லமல் இவற்றையெல்லாம் கடந்து ரசிகர்களை கவரக்கூடிய வித்தியாசமான கதையம்சத்தில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படம் அனைத்து வயதினருக்கும் பிடிக்கக்கூடிய வகையில் ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

அந்தவகையில் இத்திரைப்படத்தின் டீசர் கடந்த செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தில் வைபவ், ஆத்மிக்கா, வரலக்ஷ்மி, சோனம் பாஜ்வா, மணலி ரத்தோட, பொன்னம்பலம், கருணாகரன், ரவி மரியா, ஜான் விஜய், குட்டி கோபி, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.