தமன்னாவுடன் படத்தில் நடிப்பதற்கு நல்ல கதை தேவையில்லை! கலாய்க்கும் காஜல் அகர்வால்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் காஜல் அகர்வால், தமன்னா. மொதுவாக இரு நடிகைகள் மிக நெருக்கமாக இருப்பது மிக அரிது.


ஆனால் இவர்கள் இருவருக்குமிடையேயான நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டு அவர்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

இதில் காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படத்தை வெளியிட்டு, நாங்கள் இருவரும் ஒரு படத்தில் இணைவதற்கு நல்ல கதை எல்லாம் தேவை இல்லை என பதிவிட்டுள்ளார்.