மே 18ஐ தமிழினப் படுகொலை நினைவு நாளாக பிறம்ரன் மாநகரசபை பிரகடனம்!

இன்று (May 08, 2019) காலை கனடாவில் உள்ள பிறம்ரன் நகரசபையில், ஈழத்தமிழர் இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நிறைவையும் மே 18 தினத்தை தமிழர் இனப்படுகொலை நினைவு நாளாகவும் பிறம்ரன் நகரசபை ஏற்றுக்கொண்டுள்ளது.


தமிழினப் படுகொலை நினைவு நாள் பிரகடனத்தின் போது உரையாற்றிய மேயர் பற்றிக் பிரவுன் அவர்கள் முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் பின் தான் இலங்கை செல்ல முயற்சித்த வேளையில் இலங்கை அரசால் தனக்கு விசா மறுக்கப்பட்டதையும், தமிழ் மக்களுக்காக தான் ஜெனீவா வரை சென்று வந்ததையும் நினைவு கூர்ந்தார்.

இனப்படுகொலை நினைவு நாளை ஏற்றுக்கொள்ளும் தீர்மானம் 10:0 என்ற வாக்கு அடிப்படையில் ஒருமனதாக நிறைவேறியது இங்கு குறிப்பிடத்தக்கது.