பிக்பாஸ்-3யை தொகுத்து வழங்க கமல்ஹாசனுக்கு இத்தனை கோடி சம்பளமா? வெளியான ஷாக்கிங் தகவல்

இந்தியா முழுவதும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பல்வேறு மொழிகளில் பல நட்சத்திரங்களால் தொகுத்து வழங்கப்பட்டு வரும் இந்நிகழ்ச்சியில் அந்தந்த மொழிகளில் பிரபலமாக இருப்பவர்களே போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.


அந்த வகையில் தமிழில் கடந்த இரு சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சியில் இந்த முறை நடிகை நயன்தாரா தொகுத்து வழங்கவுள்ளார் என்றெல்லாம் கூறப்பட்டது.

ஆனால் இந்த 3வது சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கவுள்ளாராம். மேலும் இந்த சீசனை தொகுத்து வழங்க அவருக்கு ரூபாய் 100 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்சமயம் பிக்பாஸ் 3வது சீசனுக்கான ப்ரோமோஷூட் கோகுலம் ஸ்டூடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.