டொரோண்டோ வீதியில் தமிழ் இன அழிப்பு நினைவுப் பதாகை!

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 வது ஆண்டை முன்னிட்டு கனடா டொரோண்டோ பகுதியில் Genocide Against Tamils பதாகை (as Billboards Advertising) வைக்கப்பட்டுள்ளது. ஸ்கார்போரோ (Scarborough) பகுதியில் உள்ள மார்க்கம் (Markham Rd) வீதியிலே இந்த பதாகை அமையப்பெற்றுள்ளது.


இவ்வீதியால் நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்களும் பல்லின மக்களும் இந்த பதாகையை கடந்து செல்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் 10 வது ஆண்டை முன்னிட்டு கனடாவிலும், உலகெங்கும் பல்வேறு நிகழ்வுகள் சமூகமட்டத்திலும்,அரசியல் மட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் உள்ள புலம்பெயர் தமிழர்கள், இந்த இனவழிப்பு நடந்த மே மாதத்தை களியாட்டங்களை தவிர்த்து, இறந்தவர்களுக்கு நீதிவேண்டியும், நினைவுகூர்ந்தும் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.