கனடாவில் இருந்து அமெரிக்கா சென்று ஏ.டி.எம் திருட்டில் ஈடுப்பட்ட இரண்டு தமிழர்கள் பெரும்தொகை பணத்துடன் கைது!

வங்கி வாடிக்கையாளர் கணக்கிலிருந்து போலி ஏ.டி.எம் கார்டு (ATM Card) மூலம் பல ஆயிரம் டொலர்களை கொள்ளையடித்த கனடாவை சேர்ந்த இரண்டு தமிழர்களை அமெரிக்க போலீசார் Methuen நகரில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.


இவர்களிடமிருந்து பெருந்தொகைப்பணம், Gift Cards மற்றும் போலி ஏ.டி.எம் கார்டு தயாரிக்கும் இயந்திரங்கள் முதலியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

மொன்றியாலில் வசிக்கும் 30 வயதான தருஷன் நிர்மலசந்திரன் (Tharushan Nirmalachandran) மற்றும் டொரோண்டோவில் வசிக்கும் 28 வயதான அஜிதரன் ரவீந்திரன் (Ajitharan Raveendran) ஆகிய இருவருமே கைதுசெய்யப்பட்டவர்களாவார்கள்.

குறித்த நபர்கள் டொரொண்டோவிலிருந்து அட்லாண்டா வரை விமானமூலம் சென்று, அங்கு ஒரு வாகனத்தை வாடகைக்கு எடுத்து அமெரிக்காவின் கிழக்கு பகுதி நோக்கி செல்ல தொடங்கினர். போகும் வழியெங்கும் உள்ள ATM இயந்திரங்களில் பணத்தை எடுத்தவாறு சென்ற இவர்களை பின்தொடர்ந்த போலீசார் வழியில் இவர்கள் தங்கிய விடுதி ஒன்றை காலை 6:35 மணியளவில் உட்சென்று சோதனை நடத்தியே இவர்களை கைதுசெய்தார்கள்.

Police said they recovered $51,610 in cash inside duffel bags, gift cards, debit cards and a printing device. They also found an electronic device that activates and utilizes bank cards inside a vehicle that was rented to one of the suspects.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இவர்களை $500,000 ரொக்கம் பிணையில் செல்ல நீதிபதி அனுமதித்தபோதும், குறித்த இந்த பெரும் தொகையை செலுத்தி இவர்கள் பிணை பெறுவதில் உள்ள தடை குறித்து இவர்களின் வழக்கறிஞர் ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.

தருஷன் நிர்மலாசந்திரன் (30) – அஜிதரன் ரவீந்திரன் (28)

கொள்ளையடித்த பணத்தை நியூயார்க் சூதாட்ட விடுதியில் மாற்றி வெள்ளை பணமாக கனடாவுக்கு எடுத்துச் செல்வதாக அரச சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

இவர்களுடன் தொடர்புடைய மேலும் ஒரு நபர் கைதுசெய்துள்ளதாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.

Source: https://wcvb.com/article/pair-from-canada-suspected-of-running-atm-theft-ring-out-of-hotel-room-methuen-police-say/27297524