பெண்மணியை வாகனத்தால் மோதிவிட்டு தப்பிச்சென்ற தமிழ் வாகன சாரதி கைது!

75 வயதான பெண்மணியை வாகனத்தால் மோதிவிட்டு தப்பிச்சென்ற தமிழ் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.


நேற்று முன்தினம் Eglinton Avenue மற்றும் Hurontario Street பகுதியில், Sorrento Drive மற்றும் Elia Avenue வீதிச் சந்திப்பில், மாலை 5 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த அந்தப் பெண் (Rafaela Piedrasanta) Elia Avenueவின் தென் பகுதியில் இருந்து வட பகுதி நோக்கி நடந்து சென்ற போது, அந்த வழியே வந்து வலதுபக்கமாக திரும்பிய வாகனத்தினால் மோதுண்டுள்ளார்.

சம்பவ இடத்தில் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்ட அவர், மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்து விட்டதனை அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை குறித்த அந்த வயோதிப பெண் மீது மோதிய வாகனம் சம்பவ இடத்தில் தரித்திருக்காது தப்பிச் சென்றுவிட்டதாக தெரிவித்து போலீசார் தீவிர விசாரணைகளை மேற்க்கொண்டு Mississaugaவைச் சேர்ந்த 37 வயதான செயந்தன் சிவகுமாரன் (Seyenthan Sivakumaran) என்பவரை கைதுசெய்துள்ளனர்.

செயந்தன் சிவகுமாரன் மீது மரணம் ஏற்பட்ட விபத்து மற்றும்
விபத்து நிகழந்த இடத்தில் நிறுத்தத் தவறிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.

Source: https://www.peelpolice.ca/Modules/News/index.aspx?feedId=d6aa0ab4-eb5f-4b5e-a251-0e833d984d68&newsId=a0e31598-3e0e-4868-9405-f94ed170f348