நயன்தாராவுக்கு அடுத்து யார் டப்பிங்? இவர் தான் முடிவு செய்வார்: முக்கிய பிரபலம் தாக்கு

சினிமா துறையில் பெரும்பாலும் ஹீரோயின்கள் தங்கள் சொந்த குரலுக்கு பதிலாக டப்பிங் கலைஞர்களின் குரலைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துவர்.


அப்படி டப்பிங் கலைஞர்களுக்கு என்று உள்ள சங்கத்தில் நடிகர் ராதாரவி தலைவராக உள்ளார். அதில் இருந்து பாடகி சின்மயி நீக்கப்பட்டது பெரிய சர்ச்சையானது. தற்போது சின்மயி நீதிமன்றத்தினை அணுகி அதற்கு தடை பெற்றுள்ளார்.

அதனால் சின்மயி இனி தமிழ் சினிமாவில் பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது என ராதாரவி உள்ளிட்டவர்கள் இயக்குனர்களிடம் கூறுகிறார்களாம்.

இது பற்றி ட்விட்டரில் பேசியுள்ள சின்மயி “ராதாரவி நயன்தாரா பற்றி அவதூறாக பேசுவார். ஆனால் நயன்தாராவிற்கு யார் டப்பிங் பேசுவது என்பதையும் அவர் தான் முடிவு செய்வார்” என காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.