தளபதியா? யாரு அது? அஜித் பட நாயகி பதிலால் கொந்தளிப்பில் விஜய் ரசிகர்கள்!

தளபதியா யாரு அது? என கிண்டலாக பதிலளித்த அஜித் பட நாயகியை விஜய் ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் என்றால் பலருக்கும் முதலில் ஞாபகம் வருவது என்றால் அஜித்தும் விஜயும் தான்.

எந்தவொரு பிரபலங்கள் பேட்டி கொடுத்தாலும் அந்த பேட்டியில் நிச்சயம் அஜித் விஜய் பற்றிய கேள்வி இருக்கும்.

தற்போது நேர்கொண்ட பார்வை நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தலையா? தளபதியா? என கேட்ட கேள்விக்கு தளபதியா? அது மணிரத்தினம் இயக்கிய படம் தானே என கிண்டலாக பதில் கொடுத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இறுதி வரை அந்த கேள்விக்கு அவர் பதில் சொல்லவே இல்லை. இதனால் கோபமான விஜய் ரசிகர்கள் என்னதான் அஜித் படத்துல நடித்திருந்தா கூட தளபதினா விஜய்னு தெரியாதா அவரை போட்டு தாளித்து எடுத்து வருகின்றனர்.