வாணி ராணி மானஸிற்கு திடீர் திருமணம் – பெண் யார் தெரியுமா?

வாணி ராணி மானஸிற்கு திடீரென திருமணம் நடந்து முடிந்துள்ளது. தன்னுடைய மனைவியுடன் மானஸ் இருக்கும் புகைப்படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது.


தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மானஸ்.

இவர் தற்போது விஜய் டிவி சீரியலான அரண்மனை கிளி என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கும் இவருடைய காதலியான நீரஜாவிற்கும் கடந்த திங்கள் அன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இது குறித்து நீரஜா கூறியதாவது, ரெண்டு பேரும் ஹாப்பியா இருக்கோம். 10 வருடமாக காதலிக்கும் போது எப்படி இருந்தோமோ அப்படி தான் இனியும் இருப்போம்.

எங்களின் காதலை புரிந்து கொண்டு எங்களது பெற்றோர்களும் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி தான் திருமணம் நடைபெற்றது என கூறியுள்ளார்.