தல 61 படத்தை எடுப்பது இவர் தான்; வெளிவந்த புதிய தகவல் இதோ!

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.


இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில் பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் அண்மையில் நிறைவுக்கு வந்தது.

இதைதொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அஜித்தின் அடுத்த படத்தை வினோத்தான் இயக்குவர் என்றும் இது ஃபிரெஷ்ஷான ஒரு கதை என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இது ஒருபக்கம் இருக்க அஜித் நடிக்கும் 61-வது படம் குறித்த ஒரு தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது இப்படத்தை விவேகம், விஸ்வாசம் படங்களை தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறதாம்.

மேலும் மங்காத்தா படத்தை இயக்கிய வெங்கட் பிரபு இப்படத்தை இயக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.