அஜித்திடம் உள்ள நேர்மை ஏன் விஜய் டீமிடம் இல்லை, உதவி இயக்குனர் விளாசல்

தமிழ் சினிமா சமீப காலமாக பல சோதனைகளை சந்தித்து வருகின்றது. இதில் குறிப்பாக கதை திருட்டு போன்ற விஷயங்கள் பெரிய நடிகர்கள் படங்களிலேயே நடக்கின்றது.


அதிலும் தொடர்ந்து விஜய் படங்களில் இது நடந்து வருவது மிகவும் வருத்தம் தான், இந்நிலையில் தளபதி-63 கதை என்னுடையது என உதவி இயக்குனர் செல்வா கூறியது அனைவரும் அறிந்ததே.

அவர் சமீபத்தில் இதுக்குறித்து பேசுகையில் ‘நான் அஜித், விஜய் என்றெல்லாம் பிரித்து பேசவில்லை.

ஆனால், அஜித் சார் பில்லா என்ற படத்தை எடுத்தார், அவர் நினைத்திருந்தால், ரைட்ஸ் வாங்காமல், அப்படியே எடுத்துவிட்டு, வேறு ஒரு டைட்டிலில் ரிலிஸ் செய்யலாம்.

அந்த நேர்மை ஏன் இவர்களிடம் இல்லை, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று அனைத்திலும் உங்கள் பெயர் வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள்’ என்று கடுமையாக பேசியுள்ளார்.