மாகாண அரசின் நிதி குறைப்பால் மக்கள் இறக்க நேரிடும்!

டொரோண்டோவின் சுகாதார துறையில், ஒண்டாரியோ மாகாண அரசு மேற்கொள்ளவுள்ள ஒரு பில்லியன் டொலர்கள் நிதி குறைப்பினை நிறுத்த வேண்டுமென, டொரோண்டோ பொதுச்சுகாதார அலுவலகம், டொரோண்டோ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகியன கூட்டாக வலியுறுத்தியுள்ளன.


மாணவர்களின் போசாக்கு, தடுப்பூசி வழங்கல்கள், உணவு பாதுகாப்பு, குழந்தைகள் பராமரிப்பு நிலைய பரிசோதனைகள், தொற்றுநோய் தடுப்பு, பற்சுகாதார நடவடிக்கைகள் ஆகியவற்றை இந்த நிதி குறைப்பு பாதிக்குமென, டொரோண்டோ பொதுச்சுகாதார அலுவலகத்தின் நிர்வாகக்குழு தலைவரும், மாநகரசபை உறுப்பினருமான ஜோ கிரெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, டொரோண்டோ மக்கள் உயிரிழப்புக்களை சந்திக்க நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார். டொரோண்டோ சுகாதார வைத்திய அதிகாரி, வைத்திய கலாநிதி அய்லீன் டிவில்லாவும் இப்பாதிப்புக்களை சுட்டிக்காட்டியுள்ளார்.