யோகி பாபுவுக்கு ஜோடியான பிரபல கவர்ச்சி நடிகை!

தற்போது காமெடி நடிகர்களில் உச்சத்தில் இருப்பவர் யோகி பாபு. அவரின் காட்டில் தான் தற்போது மழை என்று சொல்லலாம். அவருக்கு படவாய்ப்புகள் அடுத்தடுத்து குவிந்து வருகிறது.


விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நடித்தவர் மீண்டும் விஜய்யுடன் விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார். அதே வேளையில் அவரை தர்ம பிரபு படம் மூலம் ஹீரோவாக நடிக்க வைத்துள்ளனர்.

இந்நிலையில் ஜாம்பி என்ற படத்தில் அவரை ஹீரோவாக நடிக்க வைத்து வருகிறார்கள். இதில் அவருக்கு ஜோடியாக இருட்டறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியாக நடித்த பிக்பாஸ் யாஷிகாவை நடிக்க வைத்துள்ளனர். இப்படம் முழு நீள பேய் காமெடி படமாக இருக்குமாம்.