பிரபல நடிகருக்கு மரியாதை செய்து பெருமைப்படுத்திய விஜய்! வைரலாகும் புகைப்படம்!

விஜய்க்கு உலக நாடுகள் முழுக்க ரசிகர்கள் இருந்த வருகிறார்கள். அவரின் படங்களுக்கு நல்ல வரவேற்பும் வசூலும் இருந்து வருகின்றது. உலகளவிய இடங்களில் படங்களுக்கு நல்ல விற்பனையும் இருக்கிறது.


பாக்ஸ் ஆஃபிஸில் மன்னராக வசூல் கலெக்‌ஷன் செய்து சாதனை படைக்கும் அவர் தற்போது விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் அனைவருக்கும் முக்கியதுவம் கொடுக்கும் அவர் படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய ஊழியரை பார்க்க மருத்துவமனைக்கு சென்று வந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது அவரின் முந்தய கால புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதில் அவர் கன்னட சினிமாவின் மறைந்த பிரபல நடிகர் ராஜ்குமாரின் புகைப்படத்திற்கு மரியாதை வணக்கம் செய்யும் புகைப்படம்.

ராஜ்குமாருக்கு இன்று பிறந்த நாள் என்பதால் அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளாராம்.