சூர்யா ஜோடியாக நயன்தாரா?

தமிழ் சினிமாவில் பல ஹீரோக்களும் ஜோடி சேர்ந்து நடிக்க விரும்பும் நடிகை நயன்தாரா. தெலுங்கில்தான் பல ஹீரோக்களும் நயன்தாராவை நடிக்க வைக்க ஆசைப்பட்டு வந்தார்கள். அது தற்போது தமிழ் சினிமா பக்கமும் திரும்பியுள்ளது.


எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் நயன்தாரா மீது தமிழ் ரசிகர்கள் ஒரு அபிமானத்துடன் இருக்கிறார்கள். அதுதான் அவருடைய தடையற்ற வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கலாம்.

மேலும் புதுமுக நடிகைகள் கூட நயன்தாராவிடம் தோற்றுப் போகும் அளவிற்கு அவருடைய மவுசு இன்னும் சிறிதும் குறையாமல் உள்ளது.

நயன்தாரா தற்போது, விஜய் ஜோடியாக ஒரு படத்திலும், ரஜினி ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இப்போது சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தில் ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க முடிவு செய்து பேசி வருகிறார்களாம்.

சூர்யா, நயன்தாரா இதற்கு முன்புகஜினி, ஆதவன், மாசு என்கிற மாசிலாமணி ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்கள். சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்த நயன்தாரா மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்க சம்மதிக்கலாம் என்கிறார்கள்.