OHIP’இன் பாதுகாப்பினை வெளிநாடுகளில் நிறுத்த ஒண்டாரியோ அரசு உத்தேசித்துள்ளது!

வெளிநாடுகளுக்கு பயணிக்கும் கனடியர்களுக்கான, ஒண்டாரியோ மாகாண சுகாதார காப்பீட்டு திட்டமான, OHIPஇன் பாதுகாப்பினை நிறுத்த ஒண்டாரியோ மாகாண அரசு உத்தேசித்துள்ளது.


இவ்வாறு வேறு நாடுகளுக்கு பயணிக்கும் கனடியர்கள், சிறந்த மற்றும் பரந்துபட்ட காப்புறுதிகளை, பயண காப்புறுதி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டுமென, இம்மாற்றங்களுக்கான உத்தேச வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, வெளிநாடுகளில் ஏற்படும் அவசரநிலை மருத்துவ செலவுகளில் 94 வீதத்தினை, குறித்த காப்புறுதி நிறுவனங்கள் ஈடுசெய்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது, வெளிநாடுகளுக்கு பயணிக்கும் கனடியர்களின் அவசரநிலை மருத்துவ செலவுகளை, நாளாந்தம் 400 டொலர்கள் வரையில், OHIP சுகாதார காப்பீடு ஈடு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.