Yonge வீதி வாகன தாக்குதலின் ஓராண்டு நினைவு!

டொரோண்டோவில் Yonge and Finch சந்திப்பில், Van ஒன்றினை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் ஓராண்டு நினைவு நிகழ்வுகள் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன.


இத்தாக்குதலில், இலங்கையை சேர்ந்த ரேணுகா அமரசிங்க உட்பட, 10 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

26 வயதான தாக்குதலாளியை, Ken Lam எனும் டொரோண்டோ காவல்துறை உத்தியோகத்தர் தனி ஒருவராக கைது செய்திருந்தார்.

கொல்லப்பட்ட அப்பாவி மக்களை இந்நாளில் நினைவு கூருவதாக டொரோண்டோ நகரமுதல்வர் ஜோன் டோரி, தனது நினைவேந்தல் நாள் ஆரம்ப உரையில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, குறித்த Yonge and Finch Van தாக்குதல் சம்பவத்தையும் தாண்டி, டொரொன்டோவும் கனடாவும் உறுதியுடன் பயணிக்க வேண்டுமென, ஒண்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.