தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.


கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது.

என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் குறித்த தகவலொன்று தற்போது கிடைத்துள்ளது. அதாவது தெறி, மெர்சல் பாணியில் இப்படத்திலும் முதல் பாடல் வட சென்னை பாணியில் கானா பாடலாகவே இருக்குமாம்.

அதேபோல் நூற்றுக்கணக்கான குழந்தைகள் படை சூழ விஜய் நடனத்தில் தூள் கிளப்பி உள்ளாராம்.

இப்படத்தில் விஜய் வட சென்னை பகுதியை சேர்ந்த மைக்கல் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.