தளபதி 63 ஷூட்ங்கில் விபத்து!

தளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்தால் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னை பூந்தமல்லி அருகே உள்ள படப்பிடிப்பு தலத்தில் ஷூட்டிங் நடந்து வருகிறது.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக 100 அடி உயரத்தில் கிரேனில் கட்டப்பட்டு இருந்த ஃபோக்கஸ் லைட், எலெக்ட்ரிசியன் செல்வராஜ் தலையில் விழுந்ததில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.