சூர்யா படத்தில் இணைந்த 40 கோடி பிரபலம்!

சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் சூரரைப் போற்று.


இப்படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் இவர்களுடன் இணைந்து, சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார்.

வேஷ்டியை மடித்துவிட்டு விமானத்திற்கு முன்பு சூர்யா நிற்பது போன்ற இப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்துள்ளது.

இப்படத்தின் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம் படங்களில் நாயகியாக நடித்தவர். மேலும் ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு பாடலை பிரபல பாடகி தீ பாடியிருப்பதாக ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடைசியாக இவர் பாடிய ரௌடி பேபி பாடல் யூ டியூபில் 40 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ள நிலையில் தற்போது இவர் சூர்யா படத்திற்கு பாடுவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.