தளபதி 63ல் ஷாருக்கான் ரோல் இதுதான்!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இயக்குனர் அட்லீயின் தளபதி63 படத்தில் ஒரு சிறிய ரோலில் நடிக்கிறார் என்று கூறப்பட்டு வருகிறது. அட்லீ மற்றும் ஷாருக் இருவரும் ஒன்றாக அமர்ந்து ஐபிஎல் போட்டி பார்த்தது அதை கிட்டத்தட்ட உறுதி செய்தது.


இந்நிலையில் தளபதி63ல் ஷாருக் ரோல் பற்றி பாலிவுட் மீடியாகளில் செய்தி வெளியாகியுள்ளது. அதில் ஷாருக் கிளைமாக்ஸில் சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே வருவாராம். அதுவும் வில்லன் ரோலில் தான் ஷாருக் நடிக்கிறார் என்று தெரிவித்துள்ளனர்.

இரண்டு சினிமா துறையில் டாப் ஹீரோக்கள் உள்ளவர்கள் இப்படி ஹீரோ-வில்லனாக நடிப்பது சற்றும் எதிர்பார்க்காத ஒன்று என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.