விரிசல் விடும் நயன், சிவன் காதல்?

நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் காதல் ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். ஒரு வருடத்துக்கு முன்பே திருமணம் செய்துகொள்ளலாம் என்று விக்னேஷ் சிவன் கேட்டபோது அதை தள்ளிப் போட்டார் நயன்தாரா. தொடர்ச்சியாக வரும் பட வாய்ப்புகளே இதற்கு காரணம். காதல் ஜோடிகளாகவே தங்கள் உறவை 3 வருடமாக இருவரும் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் விக்னேஷ் சிவனின் தாயார் இவர்கள் திருமணத்தை விரைவில் நடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.


விக்னேஷ் சிவனின் தாயார் மற்றும் குடும்பத்தினரை நயன்தாரா அடிக்கடி சந்தித்து வந்தாலும் திருமணம் பற்றி மூச்சு விட மறுக்கிறார்.

இந்த ஆண்டில் திருமணத்தை நடத்திவிடலாம் என்று எண்ணிய நிலையில் நயன்தாரா இன்னும் ஒன்றரை வருடத்துக்கு மேலாக தனது கால்ஷீட்டை புதிய படங் களுக்கு ஒதுக்கித் தந்திருக்கிறார். இது விக்னேஷ் சிவனின் தாயாருக்கு வருத்தம் அளித்திருக்கிறதாம்.

காதல் ஜோடிகளாகவே காலத்தை கழிக்கலாம் என்று எண்ணிவரும் நிலையில் திருமணத்துக்கு அதிகரித்து வரும் பிரஷரால் நயன்தாரா டென்ஷனிலிருக்கிறார்.

இது இருவரின் காதலில் விரிசல் விட ஆரம்பித்துள்ளது என்ற தகவல் கோலிவுட்டில் வேகமாக பரவி வருகிறது.

நயன்தாரா விக்னேஷை ஒரு ஆண் துணையாக வைத்திருக்கின்றாவே அன்றி திருமணத்தில் நயனுக்கு ஆர்வம் குறைவு என்றும் தனது நடிப்பு தொழிலிலேயே மிகுந்த ஆர்வமாக உள்ளார் என்றும் கோலிவுட்டில் இன்று இதுதான் டாப் நியூஸ்.