புடவையை இப்படியா கட்டுவீங்க ரம்யா!

புடவையை கூட கட்ட தெரியாதா? இப்படியா கட்டுவாங்க என நெட்டிசன்கள் ரம்யாவை விமர்சனம் செய்து வருகின்றனர்.


தமிழ் சின்னத்திரையில் பிரபல டிவி சேனலான விஜய் டிவியில் தொகுப்பாளியாக வலம் வருபவர் ரம்யா. இவர் தற்போது வெள்ளித்திரையில் நடித்து வருகிறார்.

ஆண் தேவதை என்ற படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாகவும் நடிக்கிறார். வெள்ளித்திரைக்கு தாவியதும் தன்னுடைய சமூக வளையதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரம்யா தற்போது புடவையில் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார்.

இதிலும் அவர் வித்தியாசமாக ஒன்றை முயற்சி செய்துள்ளார். இதனை சில ரசிகர்கள் பாராட்டினாலும் பலர் புடவையை இப்படியா கட்டுவாங்க என விமர்சனம் செய்து வருகின்றனர்.