நடிகையிடம் தரக்குறைவாக நடந்த அட்லீ, போலீசில் புகார்!

அட்லீயா இப்படி என அனைவரும் அதிர்ச்சியாகும் வகையில் துணை நடிகை ஒருவர் அட்லீ மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.


தமிழ் சினிமாவில் மூன்று வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக இடம் பிடித்தவர் அட்லீ.

இவர் தற்போது தளபதி விஜயுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் பரபரப்பாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தில் நடித்து வரும் துணை நடிகை கிருஷ்ண தேவி என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் படப்பிடிப்பில் அட்லீயும் அவரது உதவி இயக்குனர்களும் என்னை தரக்குறைவாக நடத்தி வேலை பார்க்க விடாமல் வெளியே அனுப்பி விட்டதாகவும் இதனால் அட்லீ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்துள்ளார்.

கிருஷ்ண தேவி என்பவர் கொடுத்துள்ள புகார் விஜய் மற்றும் அட்லீ ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.