விஜய் தவற விட்ட வாய்ப்பு, சூர்யாவுக்கு மெகா ஹிட் கொடுத்த திரைப்படம்!

சூர்யாவின் மெகா ஹிட் படத்தில் முதலில் தளபதி விஜய் தான் நடிக்க இருந்துள்ளார். பல வருடங்கள் கழித்து இந்த தகவலை அப்படத்தின் நாயகி வெளியிட்டுள்ளார்.


தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக தனக்கென ஒரு இடத்தை பிடித்து பயணித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய்.

இவரது நடிப்பில் இதுவரை பல படங்கள் வெற்றி கண்டிருந்தாலும் இவர்கள் தவற விட்ட சில படங்களை பற்றிய தகவல்களை கேட்டால் அந்த படத்தில் விஜய் நடித்திருக்கலாம் என ரசிகர்கள் வருத்தப்படுவது உண்டு.

அப்படி தான் தற்போது ஒரு ஷாக்கிங் தகவலை நடிகை லைலா வெளியிட்டுள்ளார். சூர்யா, லைலா, ஸ்னேகா நடிப்பில் வெளியான மெகா ஹிட் படமான உன்னை நினைத்து படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் தானாம்.