முடிவுக்கு வந்த சூர்யா – ஜோதிகா படம்; வைரலாகும் புதிய புகைப்படம்!

திருமணத்திற்கு பிறகு நீண்ட காலம் ஓய்வில் இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் அதிரடியாக கம்பேக் கொடுத்தார்.


அந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் நடித்துவரும் அவர் இதில் பெரும்பாலும் நாயகி சார்ந்த படங்களிலேயே நடிக்கிறார்.

அந்தவகையில் குலேபகவாலி இயக்குனர் கல்யாணின் இயக்கத்தில் இவர் ஒரு படத்தில் நடிப்பதாக சில மாதங்களுக்கு முன்புதான் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் தற்போது 35 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் ஜோதிகா புல்லட்டில் அவர் அருகில் சூர்யா இருக்கும் புகைப்படம் ஒன்றும் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து இந்த படம் மே 17-ம் தேதி திரைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ஜோதிகாவுடன் ரேவதி, ஆனந்த்ராஜ், யோகிபாபு, மன்சூர் அலிகான் என ஒரு பட்டாளமே நடித்துள்ளனர்.

சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இதுபோக இரண்டு புதுமுக இயக்குனர்களின் படங்களிலும் ஜோதிகா நடித்து வருகிறார்.