சூர்யா 39 இயக்குனர் இவர் தான், அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சூர்யா 39 படத்தின் இயக்குனர் யார்? என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை ஸ்டூடியோ கிறீன் நிறுவனம் சற்றுமுன் அறிவித்துள்ளது.


தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து மாபெரும் ரசிகர்கள் பட்டாளத்துடன் வலம் வருபவர் சூர்யா.

இவரது நடிப்பில் NGK , காப்பான் ஆகிய படங்கள் ரிலீசுக்கு வரிசை கட்டி நிற்கின்றன. மேலும் இவர் தற்போது இறுதி சுற்று இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை சூர்யா39 படத்தின் அறிவிப்பு மாலை 5 மணிக்கு வெளியாகும் என ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அறிவித்து இருந்தது.

அதன்படி தற்போது சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவாதான் இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு டி. இம்மான் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.