மம்மூட்டியுடன் கவர்ச்சி நாயகி சன்னி லியோன்!

தொடர்ந்து பாலிவுட் படங்கள்ல நடிச்சிட்டு வந்த சன்னி லியோன் கவனம் இப்போ முழுக்க முழுக்க தென்னக மொழி பக்கம் திரும்பியிருக்கு.


ஏற்கனவே தமிழ்ல ஜெய்யோட வடகறி படத்தில ஒரேயொரு பாடலுக்கு நடனமாடியிருந்த சன்னி லியோன், இப்போ வீரமாதேவிங்கற மெகா பட்ஜெட் படத்தில ராணியா நடிச்சிட்டு வர்றாங்க.

இதுபோக அண்மையில் மம்முட்டியின் மதுர ராஜா படத்தில் ஒரேயொரு பாடலுக்கு சன்னி நடனமாடியிருந்தார். அந்த பாடலில் சன்னி திரையில் தோன்றிய போது ஒட்டுமொத்த திரையரங்கமே எழுந்து நின்று ஆரவாரம் செய்தது.

ரசிகர்களின் இந்த அன்பால் நெகிழ்ந்துபோன சன்னி லியோன், மலையாள ரசிகர்கள் எப்போதும் அன்பானவர்கள் என கூறி இருந்தார்.

இதைதொடர்ந்து தற்போது அந்த படத்தின் நாயகன் மம்முட்டியுடன் தான் எடுத்துகொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள சன்னி, அவருக்கு ஸ்பெஷலாக நன்றி சொல்லியுள்ளார். தற்போது இந்த படம் மலையாள ஊடகங்களில் தீயாய் பரவி வருகிறது.