2011ல் வந்த ஒரு மெகா ஹிட் படம் முதலில் அஜித்திற்கு தான் வந்து மிஸ் ஆனது!

அஜித் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் பல வெற்றிப்படங்களில் கமிட் ஆகி பிறகு அதிலிருந்து விலகியுள்ளார்.


ஏன், சூர்யா நடித்த கஜினி, காக்க காக்க ஆகிய இரண்டு படங்களும் அஜித்திற்கு வந்தது தான், இந்நிலையில் அஜித் அந்த வரிசையில் ஒரு மெகா ஹிட் படத்தை இழந்துள்ளார்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் 2011ம் ஆண்டு வெளிவந்த கோ படம் முதலில் அஜித்திற்கு தான் வந்துள்ளதாம், அவர் நடிக்காமல் போக தான் அது தனக்கு வந்ததாக ஜீவா ஒரு பேட்டியில் சொல்ல, இதைக்கேட்ட அஜித் ரசிகர்களுக்கு இப்படி ஒரு மெகா ஹிட் படம் மிஸ் ஆகிவிட்டதே என்று வருத்தம் தான்.