சர்ச்சை கதாபாத்திரத்தில் அடா சர்மா

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு – நயன்தாரா நடித்த, “இது நம்ம ஆளு” படத்தில் நடித்தவர் அடாசர்மா. அதையடுத்து பிரபுதேவாவின் “சார்லி சாப்ளின் 2” படத்தில் நடித்தார். இந்நிலையில் தற்போது அவர், “மேன் டு மேன்” என்றொரு ஹிந்தி படத்தில் நடிக்கிறார்.


இந்தப்படத்தில் அவர், ஆணாக இருந்து பெண்ணாக மாறும் வேடத்தில் நடித்துள்ளார். ஒருவரை திருமணமும் செய்கிறார். திருமணத்திற்கு பிறகு இந்த உண்மை தெரிய வர அதையடுத்து அவர்களுக்கு எந்தமாதிரியான பிரச்சனை நடக்கிறது என்பது தான் இந்த படத்தின் கதை.

இப்படியொரு சர்ச்சைக்குரிய வேடத்தில் நடிக்க பல நடிகைகள் தயங்கிய நிலையில் அடா சர்மா துணிச்சலாக ஏற்று நடித்து வருகிறார்.