Ravishankar Vallepuram

3 ஆண்டுகளாக காணாமல் போயுள்ள 33 வயதான தமிழரை தேடும் டொரோண்டோ காவல்துறை!

கடந்த மூன்று வருடங்களாக காணாமல் போயுள்ள 33 வயதான ரவிசங்கர் வல்லிபுரம் என்பவர் குறித்த தகவல் அறிந்தவர்கள் தம்மை தொடர்பு கொள்ளுமாறு Toronto காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இவர் இறுதியாக 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 15 திகதி McLevin Ave மற்றும் Neilson Rd பகுதியில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டுள்ளார். அதன் பின்பு இவர் வீட்டாரிடமோ அல்லது நண்பர்களிடமோ இதுவரை தொடர்பில் இல்லை.

5′ அடி 8 அங்குலம் உயரமும் காணாமல் போகும்போது 198 பவுண்டுகள் நிறையுமுடைய ரவிசங்கர் வல்லிபுரம், கடைசியாக ஒரு சாம்பல் குளிர்கால கோட் மற்றும் நீல ஜீன்ஸ்’ம் அணிந்திருந்தார்.

ரவிசங்கர் வல்லிபுரத்தின் விபரம் “கனடாவின் காணாமல் போனோர்” வலைத்தளத்திலும் இடம்பெற்றுள்ளது. இது காணாமற் போனோர் மற்றும் அடையாளம் காணப்படாத எஞ்சியுள்ள தேசிய மையத்திற்கான வலைத்தளம் ஆகும்.

இவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு Toronto காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இவர் குறித்த விபரம் அறிந்தவர்கள் காவல்துறையை தொடர்புகொள்ளவும்.

http://torontopolice.on.ca/newsreleases/43345