12 வயது பெண்ணின் படுகொலை – பொது மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்!

வின்னிபெக் பகுதியில் இடம்பெற்ற 12 வயது பெண்ணின் படுகொலை வழக்கில் மனிடோபா றோயல் கனேடியன் மவுண்டட் பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.


குறித்த பெண் கடைசியாக ஏப்ரல் 18, 2007 -அன்று வின்னிபெக் மேற்கு எல்லை, பகுதியில் தென்பட்டதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதையடுத்து, தகவல் தெரிவிக்கப்பட்டத்தின் படி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார்,குறித்த பெண்ணின் சடலம் செயின்ட் அம்பிரைக்கு அருகில் கண்டெடுத்தனர்

இந்நிலையில், குறித்த பெண்ணின் கொலை தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக 1-888-673-3316 அல்லது Manitoba Crime Stoppers at 1-800-222-8477 (TIPS) என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.