தாயகம் செல்லும் புலம் பெயர்ந்து வாழும் மக்கள் கவனத்துக்கு!

யாழ்ப்பாண‌ம் சென்று ஒரு மாத‌ம் குடி, குடித்தனம், ப‌ண்டிகை, விழா, காதுகுத்து, க‌ல்யாண‌ம், கருமாரி எல்லாவற்றுக்கும் நேரத்தை செல‌வு ப‌ண்ணிட்டு நாடு திரும்பும் போது மட்டும் ஏதோ நிமிட‌த்துக்கு மில்லியன் ச‌ம்ப‌ள‌ம் எடுக்கும் பில்கேட்ஸ் மாதிரி நினைத்து, நேர‌ம் மிச்ச‌ம் பிடிச்சு சாம‌ம் சாம‌மாக‌ வாகன சாரதியை ஓட‌ச் சொல்லி அவரோ காலை 3 ம‌ணிக்கு புத்த‌ள‌ம் தாண்ட‌ எங்காவ‌து கொண்டு அடிச்சு அவரும் செத்து நீங்க‌ளும் செத்து…

இதுக்கு ப‌தில் ஒரு நாளைக்கு முன்ன‌ர் புறப்பட்டு கொழும்பில் எங்காவ‌து த‌ங்கி, ப‌க‌ல் பிர‌யாண‌ம் செய்தால் அடுத்த‌ விடுமுறைக்கு உயிரோடையாவ‌து நாட்டுக்கு திரும்ப முடியும். புரிந்தால் ச‌ரி.

  • நீங்கள் நினைப்பது போல் 5 மணி நேரத்திலோ அல்லது 6மணி நேரத்தில் Air Port செல்ல முடியுமா? சிந்திப்போம். இது ஒன்றும் வெளிநாட்டு High Way இல்லை.
  • அவ்வளவு அனுபவம் கூடிய ஓட்டுநர்களும் இல்லை.
  • வாகனங்கள் Booked பண்ண முதல்ல விசாரியுங்கள்.
  • ஓடும் போது தொலைபேசியில் இருப்பார்கள் சில ஓடுனர்கள்.
  • வெற்றிலிலை போடுவது போல போதை பொருள்கள் போடுவார்கள்.
  • சற்று விசாரியுங்கள்; பிறகு உங்கள் பயணத்தை தொடங்குங்கள்.
  • சற்று சிந்திப்போம் எம் அருமை உறவுகளே, உயிர் இழப்பினை தடுப்போம்.

முக்கியமான ஒரு விடயம்

சில இளைஞர்கள் வெளிநாடுகளில் உள்ள உறவினர்களிடம் வாகனம் எடுத்து தரும் படியும் மாதாந்த பணத்தினை தாங்கள் செலுத்துவதாகவும், அவர்களும் உழைப்பதற்க்கு ஒரு வழி என உதவுகிறார்கள். ஆனால் அனுபவம் இல்லாத அந்த இளைஞர்கள் படும்பாடு உயிர் மாயும் வரை தொடர்கிறது.