காணாமல் போயுள்ள தமிழ் சிறுவனைக் தேடும் டொரோண்டோ காவல்துறை!

காணாமல் போயுள்ள 17 வயதான சஞ்சீ சிவனேஸ்வரராசா (Sanji Sivaeaswararasa) என்ற தமிழ் சிறுவனை கண்டுபிடிப்பதற்காக டொரண்டோ காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.


சஞ்சி சிவபெருமானை (வயது 17), நேற்று திங்கட்கிழமை, ஏப்ரல் 15, 2019, காலை 11 மணியளவில் Brimley Road & St. Clair Avenue East பகுதியில் இறுதியாக காணப்பட்டுள்ளார்.

5’10 ” உயரம் மற்றும், 140Lb எடை உள்ளவர் என விவரிக்கப்படுகிறார். கடைசியாக கருப்பு நிற விளையாட்டு நீள் கால்ச்சட்டையும் , சிவப்பு தொப்பியும், கருப்பு ஜாக்கெட் மற்றும் கருப்பு மற்றும் வெள்ளை அடிடாஸ் காலணியும் அணிந்திருந்தார்.

அவரது பாதுகாப்பு குறித்து பொலிஸார் கவலை கொண்டுள்ளனர்.

காணாமல்போயுள்ள சிறுவன் குறித்து தகவல் தெரிந்தவர்கள் 416-808-4300 அல்லது 416-222-டிப்ஸ் (8477) என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.