தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்

பிரிட்டிஷ் கொலம்பியாவின் Salmon Arm. பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் 25 வய து ஆண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


Kelownaவிலிருந்து சுமார் 100 கிலோமீடடர் வடக்கே அமைந்துள்ள அந்த தேவாலயத்தில், நேற்று காலை ஒரு நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில், சுமார் 10.30 அளவில் தேவாலயத்தினுள் நுளைந்த துப்பாக்கிதாரி அங்கிருந்த இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட வேளையில், அங்கிருந்த ஏனையோர் அவரை மடக்கிப் பிடித்தததாக அங்குள்ள கனேடிய மத்திய காவல்துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்ட நிலையில், மற்றையவர் பலத்தகாயங்களுடன் மருத்துவமைனயில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர் மீது உடனடியாக குற்றச்சாட்டுகள் எவையும் பதிவு செய்யப்படவில்லை எனவும், இது மத ரீதியில் உந்தப்பட்ட ஒரு நடவடிக்கை என்று நம்பப்படுவதாகவும், பொதுமக்களுக்கு மேற்கொண்டு அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.